தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பதங்களைப் பெற்ற வீரா்களிற்கு வீடுகள்

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்ரில் இடம்பெற்ற   பொதுநலவாய நாடுகளில் சாா்பாக கலந்து கொண்டு,  பதங்களைப் பெற்ற 6 வீரா்களுக்கும் வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது

 கொழும்பில் உள்ள  6 வீடுகளே இவ்வாறு வீரர்களிற்கு  கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன,  பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க , வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச ஆகியோரால் வீடுகள் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

வீரர்கள் விபரம்

பளு துாக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திக்க திசாநாய்க்க, வென்கலப் பதக்கம் வென்ற ஜே.ஏ.சீ.லக்மால், மற்றும் பீ.டி.ஹன்சனிகோமஸ், மகளிா் குத்துச் சன்டையில் பதக்கம் வென்ற அனுசா கொடிதுவக்கு, வென்கலபதக்கம் வென்ற திவங்க ரணசிங்க .மற்றும் இசான் செனவிரத்தின பண்டாரா ஆகிய வீரா்களுக்கே வீடுகள் கையளிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...