கடந்த 14ஆம் திகதி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (21ஆம் திகதி) வரை பல்வேறு போராட்டங்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.
இந்த சர்ச்சைகளுக்கு சமரசம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடமாகாண சபையின் 97ஆம் அமர்வு கூட்டப்பட்டது.
இந்த அமர்வில் பல புதிய சர்ச்சைகள் உருவாகும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் உலாவியது.
குறிப்பாக அவைத்தலைவர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பித்த நிலையில் அவைத்தலைவர் பதவி நீக்கப்படுவாரா என்பது உட்பட பல கருத்துக்கள் நிலவியது.
எனினும் இன்றைய அமர்வு மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
இன்றைய அமர்வில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பின்ர்கள் தமக்குள் சாதாரணமாக பேசிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் பாரிய பிரச்சினைகள் நடந்தமை தொடர்பான ஒரு அறிகுறி கூட சபையில் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.