இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றுமுன்தினம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்த நிலையில் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமநடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்தநிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இணைய நடவடிக்கைகளையும், சமூக வலைத்தள நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் சயிட் என்னும் புலனாய்வு அமைப்பு இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலை அந்த அமைப்பினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.