அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 5 பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுக்காயமடைந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் துப்பாகிச்சூடு நடத்திய நபரைப் பிடிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபரை போலீசார் துப்பாக்கி சூட்டி சம்பவத்தின்போது சுட்டுக் கொன்றதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகன் பார்க் பகுதியில் இயங்கி வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய வாரண்ட் கொடுக்க சென்ற போலீசார் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக த்கவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.