போலி விசா மூலம் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 130 பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போலி விசாவில் மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க, எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்போது மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலீசாரால் உருவாக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சேர 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதற்காக அமெரிக்காவில் உள்ள ஏஜெண்டுகள் சிலர் அந்த பல்கலைக் கழகத்தில் பயிற்றுவதாகக் கூறி, 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை கமிஷன் வாங்கிக் கொண்டு F1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதனை அடுத்தே குறித்த இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.