அர்ஜுன தலைமையிலான குழுவினர் பலாலி விமான நிலையத்திற்கு விஜயம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குறித்த குழுவினர் இன்று (வியாழக்கிழமை) இந்த விஜயத்தை மெற்கொண்டிருந்தனர்.

இந்த குழுவில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள்,பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். பலாலி விமான நிலையத்தின் விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதால், அதற்காக அபிவிருத்திப்பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

விமான நிலைய அபிவிருத்தியின்போது ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன், பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பலாலி
Comments (0)
Add Comment