ஆந்திரா கடப்பாவில் வாகன சோதனையில் ரூ.8 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 கார், 1 லாரி, செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடப்பா மாவட்ட எஸ்.பி.நலான்குட்டி தகவல் தெரிவித்துள்ளார். கடத்தல் மன்னன் கங்கிரெட்டியின் கூட்டாளி சிவசங்கர் தலைமையில் கடத்தல் நடந்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதலான செம்மரத்தின் மதிப்பு ரூ.8 கோடி என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.