ஓண்டாரியோ நகரில் உள்ள நேற்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள மருத்துவமனை வெளியே ஆம்புலன்ஸ் ஒன்று நின்றுள்ளது.
அதில், பெண் மருத்துவர் ஒருவர் அமர்ந்திருந்தபோது திடீரென நபர் ஒருவர் ஆம்புலன்ஸில் ஏறி இயக்கியுள்ளார்.
நபரை கண்டு அலறிய மருத்துவர் கதவை திறந்துக்கொண்டு கீழே குதித்துள்ளார். ஆம்புலன்ஸ் திருடப்பட்டதும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆம்புலன்ஸ் சென்ற திசையை நோக்கி புறப்பட்ட பொலிசார் ஆம்புலன்ஸை நிறுத்துமாரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் நிற்கவில்லை.
சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் அதிரடியான செயலில் பொலிசார் ஈடுப்படவில்லை. சில இடங்களில் ஆம்புலன்ஸில் உள்ள சிவப்பு விளக்கல் எரியவிட்டவாறு நபர் ஓட்டியுள்ளார்.
சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் 400 கி.மீ தூரப்பயணத்திற்கு பின்னர் பொலிசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை சுற்றி வளைத்துள்ளனர். மேலும், 29 வயதான நபரையும் கைது செய்தனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வாகனத்தை அவர் ஏன் திருடினார் என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை.
’நபர் ஆம்புலன்ஸை திருடியபோது அவரை எதிர்த்து பெண் மருத்துவர் போராடவில்லை. இது நல்ல விடயம் தான். எதிர்த்து போராடியிருந்தால் அவரது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும்’ என பொலிசார் தெரிவித்துள்ளனர்.