ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் வாய்ப்பு இருப்பதாக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது.
இந்த தீ காற்றின் வேகத்தில் வேகமாக பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெருப்பு எரிந்து வருகிறது.
நெருப்பை அணைக்க நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனினும் தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.