இடைநீக்கம் செய்யப்பட்ட கீர்த்தி ஆசாத்திற்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி கருத்து

கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையான நபர்களை பாரதிய ஜனதா இழக்கும் என தாம் எண்ணவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

 கீர்த்தி ஆசாத் இன்னும் பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறார் என்றும், அவருக்கு உதவி செய்ய தமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், கீர்த்தி ஆசாத் கட்சியின் தலைமைக்கு விளக்கம் அளிப்பதற்கான உதவிகளை செய்வேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இடைநீக்கம்ஊழல்கீர்த்தி ஆசாத்சுப்ரமணியன் சுவாமிபாரதிய ஜனதா
Comments (0)
Add Comment