காசோலைகள் பணமின்றி திரும்புதல் தொடர்பான வழக்குகள் குறித்த அவசரச் சட்டத்தை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி நேற்று பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசோலை திரும்புதலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது போன்றவர்களுக்கு உதவும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வரும் 14வது அவசரச் சட்டம் இதுவாகும். இந்த அவசரச் சட்டத்துக்கு கடந்த 10ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.