இலங்கை கடற்படையால் கடந்த புதன்கிழமை சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவில்லை என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.