இம்சை நடிகரால் காமெடி படத்திற்கு வந்த வினை!

விரல் வித்தை நடிகரின் பெயரை கொண்ட இயக்குநர் ஒருவர் வைகையை சேர்ந்த காமெடி நடிகரை வைத்து காமெடி படத்தின் அடுத்த பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரமாண்ட பாடல் ஒன்றும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இப்படியிருக்கும் போது படத்தின் திரைக்கதையில் இயக்குநர் சில மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று காமெடி நடிகர் வற்புறுத்தி வருகிறாராம்.

நடிகரின் இந்த திடீர் முடிவால் இயக்குநரும், இந்த படத்தை தயாரிக்கும் பிரமாண்ட இயக்குநரும் செய்வதறியாது முழித்து வருகிறார்களாம். மேலும் நடிகர் மீது சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த படத்திற்கு வந்த புதிய சோதனையால் படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் கவலையில் இருக்கின்றர்களாம்.

காமடிதமிழ்நடிகர்
Comments (0)
Add Comment