இரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தனபால் விஜயரட்னம் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி இளைஞனை கொலை செய்த சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் இடம்பெற்ற நிலையில் சந்தேகநபரை உடனடியாக கைதுசெய்வதாக பொலிஸார் வழங்கிய உறுதியளித்ததையடுத்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டடதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.