நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கஹவத்தையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதோடு நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு நல்ல பெளத்தருமோ, அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை என்றும்,
நாட்டில் நிலவிய மோசமான போரை, முடிவுக்கு கொண்டு வந்து, நாட் டைப் பாது காத்த போர் வீரர்களை எந்த வொரு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பெரும் நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணை களை மேற்கொள்ளும் இரண் டாவது விசேட மேல் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் நிறுவப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் என்றவகையில்தனக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த விசேட நீதிமன்ற அமைப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
அந்தவகையில் முதலாவது விசேட நீதிமன் றம் புதுக்கடை நீதிமன்ற வளா கத்தில் அமைக்கப்பட்டு தற்போது வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில்,
இரண்டாவது நீதி மன்றம் அமைய விருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை எனவும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.