கடந்த நாட்களில் நுவரெலியாவில் 22 பாகை செல்சியஸாக காணப்பட்ட வெப்பநிலை தற்போது 19 பாகை செல்சியஸாக குறைவடைந்துள்ளது.
கடந்த நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்ட மழையுடனான காலநிலை காரணமாக பூமியின் வெப்பம் குறைவடைந்துள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை இடைக்கிடையே பெய்வதனால் இவ்வாறு வெப்பம் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த மாதம் 20ஆம் திகதி வரையில் தென்மேற்கு பருவமழை முழுமையாக ஆரம்பமாகிய பின்னர் இந்த வெப்பம் முழுமையாக குறைவடைந்துவிடும் என வானிலை ஆய்வாளர் கே.ஆர்.அபேசிங்க தெரிவித்துள்ளார்.