ஈழ அகதியின் சாவு தொடர்பாக விசாரணை!

இராமநாதபுரம் அருகே கடற்கரையில், திருச்சியைச் சேர்ந்த இலங்கை அகதி செவ்வாய்க்கிழமை சடலம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் மரியநாயகம் (55). இவர் திருச்சி அருகேயுள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் இராமநாதபுரம் அருகேயுள்ள அலைகாத்த வலசை கிராம கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து பிரப்பன் வலசை கிராம நிர்வாக அலுவலர் சண்முகவேல் அளித்த புகாரின் பேரில் மண்டபம் கடலோரக் காவல் குழும பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் புலன் விசாரணைக்காக இவ்வழக்கு உச்சிப்புளி பொலிஸாரிடம் மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அகதி முகாம்ஈழ அகதிசடலம்தமிழகம்வாழவந்தான் கோட்டைவிசாரணை
Comments (0)
Add Comment