தயாரிக்கப்பட்ட உணவை தனது மகனுக்குக் கொடுத்தபோது, ஆத்திரம் கொண்ட மகன், தனது தாயை, தடியொன்றினால் தாக்கிக் கொலைசெய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த வெலிகம பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். கொலை செய்த நபர், 42 வயது நிரம்பியவர் எனவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் நீண்டகாலமாக அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.