அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சி பாடசாலையைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் 6.3 நனோ மீற்றர் பருமனுடைய இந்த புகைப்படக்கருவி வில்லை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பருமன் மனித கேசமொன்றின் பருமனுடன் ஒப்பிடுகையில் 2000 இல் ஒரு மடங்கு அளவுடையதாகும்.
இந்தப் புகைப்படக் கருவி வில்லையின் கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் வங்கிக் கடன் அட்டை அளவான பருமனுடைய கையடக்கத் தொலைபேசிகள் உருவாக்கப்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னேற்றமுடைய கற்றையைப் பயன்படுத்தி மொலிப்டெனம் டீசல்பைற் பளிங்கிலிருந்து அணுஅணுவாக படலங்களை அகற்றி இந்த வில்லை உருவாக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆய்விற்கு தலைமை தாங்கிய கலாநிதி லு தெரிவித்தார்.