எதிர்வரும் 30 ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி….

எதிர்வரும் 30 ஆம் திகதி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால்  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி  எதிர்வரும்   முப்பதாம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படுமென வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க ஊடக பேச்சாளர் தே.தவராசா அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இதில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், ஏனைய தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தவராசா குறிப்பிட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மட்டுமின்றி சர்வதேசத்தினாலும் எந்ததொரு தீர்வும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்கின்றது.

இந்நிலையில்  இந்த விவகாரத்துக்கு எதிராக இப்போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  அனைத்து தரப்பினரும் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை வழங்க வேண்டுமென  அவர் இதன்போது  வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம்தவராசாவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்வவுனியா
Comments (0)
Add Comment