வவுனியா ஏ9 வீதி, கனகராயன்குளம் பகுதியில் இன்று கனரக வாகனம் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்துடன் மோதி குடைசாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது.
யாழ். நோக்கி ஏ9 வீதியூடாக தேங்காய்கள் ஏற்றி கொண்டு பயணித்த கனரக வாகனத்தை திடீரென நிறுத்த முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டை இழந்து அறுவடை இயந்திரத்துடன் மோதி குடை சாய்ந்துள்ளது.
இதன் போது அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.