அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துவிட்டு, தமிழக முதல்வர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற அவர், ஆளுநர் ரோசய்யாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு வந்து தன்னை முதல்வராக பதவியேற்க அனுமதிக்கும்படி, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளிக்கிறார். அதன்பின்பு நாளை முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார்.