கவர்னர் ரோசய்யா ஜெயலலிதாவுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்

ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5-வது முறையாக பதவியேற்றார். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று (சனிக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மிகவும் கோலாகலமாக நடந்தது. இதற்காக பல்கலைக்கழக வளாகப் பகுதியில் விரிவான ஏற்பபாசெய்யப்பட்டிருந்தன.

முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதை காணத்திரண்டு வந்த அ.தி.மு.க.வினர், பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்களை அவர்களுக்குரிய இடங்களில் அமர செய்யும் பணிகளில் காலை முதலே போலீசார் ஈடுபட்டனர். மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வந்து செல்லவும், வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துவ தற்கு உதவவும் சுமார் 7 ஆயிரம் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.ஜெயல்லைதாவின் வீடு இருக்கும் போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைக்கழகம் வரை பிரமாண்ட வரவேற்பு பேனர்கள் வைக்கபட்டு இருந்தன.கடற்கரை சாலையில் 8 கி.மீ தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். எழிலகத்தின் மாடியில் இருந்து ராட்சத பலன்களில் காமிராக்கள் பொருத்தி போலீஸ் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் காலை 10 மணிக் கெல்லாம் தங்களுக்கு ஒதுக் கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் காலை 9 மணிக் கெல்லாம் சென்னை பல் கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு பகுதியில் அ.தி.மு.க.வினர் குவியத் தொடங்கினார்கள்.

10 மணிக்குள் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், புதிய மந்திரிகள் 28 பேர் மற்றும் 144 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந் தனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விழாவில் பங்கேற்றனர்.

10 -45 மணிக்கு ஜெயலலிதா பதவி ஏற்புவிழாவுக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார். ஜெயலலிதா 10.55 மணிக்கு வந்தார். அவரை அரசு உயர் அதிகாரிகளும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் உற்சாக மாக வரவேற்றனர். இதை யடுத்து சிறிது நேரத்தில் கவர்னர் ரோசய்யா வந்தார். அவரை ஜெயலலிதா வணங்கி  ப்பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.பின்னர் ஜெயலலிதா அமைஅச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை கவரனருக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முதலில் ஜெயலலிதா முதல்- அமைச்சராக 11.10 மணிக்கு பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இதன் மூலம் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5-வது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டதும் அரங்கில்  திரண்டிருந்தவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமார், மற்றும் கூட்டணிகட்சி தலைவர்கள், திரை உல பிரமுகர்க நடிகர் விவேக். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன்,தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு,பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், வெண்ணிர ஆடை நிர்மலா,  நடிகர்கள் சிவகுமார். கார்த்தி,பிரபு, ஆன்ந்தராஜ், மனோபாலா,பின்னணி பாடகி பி.சுசிலா, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் பதவி ஏற்று வருகின்றனர். அவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார்.

அ.தி.மு.க.வினர்கவர்னர் ரோசய்யாஜெயலலிதாபதவி ஏற்பு விழாபதவி பிரமாணம்புதிய அமைச்சரவை