காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னாகம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்..

யாழ் – சுன்னாகத்தில்பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக  பொது மக்களின் காணியை பொலிஸார்  சுவீகரிப்பதற்கு எடுத்த நடவடிகைக்கு  எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவரை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் , மக்கள் குடிமனைக்கு நடுவில் வேண்டாம் என   குறித்த  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு  இந்த விடயம்  தொடர்பில்  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் மக்கள் உடுவில் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

சுன்னாகம் – புன்னாலைக்கட்டுவன் வீதியில் இயங்கும் பொலிஸ் நிலையத்தை ஒப்படைக்குமாறு கோரப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு  மாற்றுக் காணியை வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம்  ஈடுபட்டது.

அதன்படி சுன்னாகம் – புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு அருகில் உள்ள அரச காணியை பொலிஸாருக்கு  வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த அரச காணி தமக்கு பொருத்தம் இல்லை என்று கூறிவரும் சுன்னாகம்  கே.கே.எஸ் வீதிக்கு மிக அருகில் உள்ள புலம் பெயர் நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள பொது மகன் ஒருவருடைய 14 பரப்பு காணியை தருமாறு கோரி வந்தனர்.

இந்த நிலையில்   குறித்த காணியை சுவீகரித்து பொலிஸாருக்கு  ஒப்படைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே சுன்னாகம் பகுதி மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்புசுன்னாகம்சுவீகரிப்புதனியார் காணிபொலிஸ் நிலையம்யாழ்
Comments (0)
Add Comment