சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்வது என்பது இந்த உலகில் எந்தப்பகுதியிலும் சற்று கடினமானதே!
இந்நிலையில், காற்றில் உள்ள நீராவியை நீர்த்துளிகளாக சேமிக்கக்கூடிய போத்தலொன்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.
ஒரு மணிநேரத்தில் காற்றிலிருந்து 0.5 லீற்றர்கள் அளவுடைய நீரை உற்பத்தி செய்யக்கூடியதாக இந்த போத்தல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக உலகெங்கிலும் உள்ள 1.2 பில்லியன் மக்கள் பயனடைவார்கள் என இதனை உருவாக்கிய ஆய்வாளர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.