மன்னார் சதொச வளாகத்தில் இன்றையதினம் காலில் விலங்கிட்டு பூட்டியபடி எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமாத்திரமல்லாமல் பெண்கள் அணியும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் சதொச வளாகமனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
குறித்த மனித புதை குழியில் தற்போது வரை 256க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த அகழ்வு பணிகள் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.