கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த பல்கலைகழக மாணவர்கள்..

யாழ் பல்கலைகழக மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளிற்கு நீதிவேண்டி  ஆரம்பித்துள்ள  நடைபயணம் இன்று தமது இரண்டாவது நாளாகத் இன்று தொடருகின்றது.

இந்த விடுதலைக்கான நடைபயணத்தில் கிளிநொச்சி வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்களின் கவனயீர்ப்பு போராட்ட இடத்தில் பெற்றோர்களைச்சந்தித்து. மதிய உணவினையும் முடித்து அவர்களிடமும் ஆசிவேண்டி தமது விடுதலைக்கான நடைபயணத்தை  அவர்கள் தொடர்ந்துள்ளனர்…

தமது உறவுகளிற்கான  விடுதலைவேண்டி தொடரும் இந்த  நடைபயணத்திற்கு இன்று கிளிநொச்சி வாழ்மக்கள் பூரணமாக ஆதரவளித்தனர்.

மாணவர்களின் நடைபயணத்திற்கு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதரவளித்துள்ள நிலையில் , இதேபோன்று அணைத்து மக்களும் எழுந்து அரசுக்கெதிரான போராட்டங்கள் செய்தால் எமக்கான தீர்வு கிடைக்கும் என பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தலைவர் கூறியுள்ளார்.

அதோடு எமது இலக்குவரைக்குமான போராட்டம் தொடர்ந்தவண்ணம் இருக்கும் என பல்கலைகழக  மாணவர் ஒன்றிய தலைவர் திரு கிருஷ்ணமீனன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சிசந்திப்புநடைபவனிபெற்றோர்கள்மாணவர்கள்
Comments (0)
Add Comment