குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் 108 பேர் கைது..

குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் 108 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதில் 44 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமடுமல்லாமல் நேற்று முன்தினமும் நேற்றும் 9பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குருநாகல், நாரம்மலையில் மணல் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த வியாபாரி விநியோகம் செய்த மணலில் மிதிவெடி ஒன்று இருந்ததாக மணல் கொள்வனவு செய்த ஒருவர் வழங்கிய முறைப் பாட்டையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருநாகல்கைதுமுஸ்லீம்கள்
Comments (0)
Add Comment