குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதரைக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும் இல்லாத காரணத்தினால் நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த பொதியில் பதிவு இலக்கங்கள் காணப்படாத காரணத்தினால் அப் பொதியை தலைமை காரியாலய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்வையிட்டுள்ளனர். இதன்போதே குறித்த பொருட்களுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை கண்டு நாரஹேன்பிட்டி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த பொருட்களை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.