சரத்பொன்சேகாவிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு..

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட கூட்டமொன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது  கட்சி தலைமையின் உத்தரவைமீறி கட்சித்தாவியவர்களுக்கு பதவி வழங்கப்படக்கூடாது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொன்சேக்கா உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தான் அமைச்சப் பதவி வழங்கமாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி  ஒரு ,  மனநோயாளி என  சரத்பொன்சேகா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடுமையாக விமர்சித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

அமைச்சுஅறிவிப்புசரத்பொன்சேகாஜனாதிபதிபதவி
Comments (0)
Add Comment