சாக்கடையாக மாறி வரும் புண்ணியஸ்தலம்

பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் கடற்கரை, கழிவுநீர் கலந்து நாளுக்கு நாள் உபயோகப்படுத்த நிலைக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் கடலில் நீராடுவதை புண்ணியமாக கருதுகின்றனர். ஆனால், கடற்கரை பகுதியை சுற்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடற்பகுதியில் கலப்பதால் அந்த பகுதியே மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. அதனால், அப்பகுதியில் நடமாடவோ, வலைகளை உலர்த்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.  கடலில் தொடர்ந்து கலக்கும் கழிவுநீரால் கடலின் நிறமே மாறி விட்டதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதாக கூறி தினமும் படகு ஒன்றுக்கு 5 ரூபாய் வசூலித்ததாகவும் தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.  இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான ராமேஸ்வரத்தை மீண்டும் பழைய பொலிவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடற்கரைகலப்புகழிவுசுற்றுலாதலம்நீர்பிரசித்திராமேஸ்வரம்
Comments (0)
Add Comment