சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராம்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணைக்காக ராம்குமார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து ராம்குமாரை ரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா? என்பதும் குறித்தும் போலீசார் விசாரித்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம்குமார் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுவாதியை எப்படி கொலை செய்தார் என நடித்துக் காட்டுமாறு போலீசார் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.