ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது; 13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

13 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 முதல் திரைப்படமாக 2015 இல் பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளி கரடி விருது பெற்ற “விக்டோரியா” என்ற திரைப்படம் முதலில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படங்களை பார்ப்பதற்காக ரூ 500 வசூலிக்கப்படவுள்ளது, சினிமா துறையினருக்கும், மாணவர்களுக்கும் ரூ 200 ஆறிவிக்கப்படவுள்ளது.

 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 36 படங்கள், சீனா, வெனிசுலா உள்ளிட்ட 57 நாடுகளைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என மொத்தம் 184 படங்கள் திரையிடப்பட உள்ளன.

 மேலும் மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களுடைய 7 படங்கள் திரையிடப்படவுள்ளன. இவ்விழாவில் திரையிடப்படும் 36 வயதினிலே, தனி ஒருவன், பிசாசு உள்ளிட்ட 12 தமிழ் படங்களுள் சிறந்த 3படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.

சர்வதேச திரைப்பட விழாசினிமாசென்னைதிரைப்படங்கள்
Comments (0)
Add Comment