ஜல்லிக்கட்டு குறித்து புத்தாண்டில் நல்ல செய்தி வரும்: பிரகாஷ் ஜவடேகர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்னும் ஒரு சில நாட்களில் நல்ல செய்தி வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், புத்தாண்டின் நல்ல செய்தியாக ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான செய்தி வெளி வரும் என தெரிவித்துள்ளார். மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் மத்திய அரசு உறுதியுடன்  இருப்பதாகவும், ஜல்லிக்கட்டை நடத்துவதில் சில வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், மத்திய அமைச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கலாச்சாரம்ஜல்லிக்கட்டுபிரகாஷ் ஜவடேகர்புத்தாண்டு
Comments (0)
Add Comment