ஜார்கண்ட் மாநில பா.ஜ., சட்டசபை குழு தலைவராக ரகுபர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த மாநிலத்தின் 10 வது முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். ரகுபர்தாஸ் இம்மாநிலத்தின் பா.ஜ., துணை தலைவராவார். இந்த மாநிலத்தை பொறுத்தவரை மலை வாழ் இனத்தை சேர்ந்த ஒருவரே எப்போதும் முதல்வராக வருவது வழக்கம் ரகுபர்தாஸ் இதனை முறியடித்துள்ளார். கடந்த 2009 முதல் 10 வரை துணை முதல்வராக இருந்தார்.ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த கட்சிக்கு ஜார்கண்ட் விகாஸ் முக்தி மோர்ச்சா நிபந்தனையற்ற தனது முழு ஆதரவை தருவதாக அறிவித்துள்ளது.
யார் இவர்?
பெயர்: ரகுபர் தாஸ்
பிறந்த தேதி : 1955 மே 3
வயது : 59
படிப்பு : பி.எஸ்சி.,
பணி அனுபவம் : முன்னாள் டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்
கட்சி : பா.ஜ.,
அரசியல் அனுபவம் : 4 முறை எம்.எல்.ஏ.,
வகித்த பதவிகள் : ஜார்க்கண்ட் துணை முதல்வர், மாநில அமைச்சர், மாநில பா.ஜ., துணைத்தலைவர்
சொத்து மதிப்பு : 24 லட்சம் ரூபாய்
ஜார்க்கண்டில் பழங்குடி இனத்தைச் சாராத முதல் முதல்வர்.