மனித உரிமைகள் விவகாரங்களில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் அதிருப்தியை வெளியிடவுள்ளன. நாளை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான விவாதம் மார்ச் 20ஆம் நாள் நடைபெறும் போது, இலங்கை அரசாங்கத்தை துளைத்தெடுக்க அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்கள் தயாராகியுள்ளன.
மனித உரிமை விவகாரங்களைத் தீர்ப்பதற்கு இலங்கை தவறியுள்ளதாகவும், மெதுவாகவே செயற்படுவதாகவும், ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மார்ச் 20ஆம் நாள் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றப் போவதை 37 அரசசார்பற்ற நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. பல அமைப்புகள் முன்கூட்டியே தமது எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.