ஜெயாவை அம்மா என்று அழைப்பது இழுக்கு! திரு­வ­டி­குடில் சாமியார்

ஊழல் வழக்கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவை அம்மா என்று அழைப்­பது மிகப்­பெ­ரிய இழுக்கு என திரு­வ­டி­குடில் சாமியார் தெரி­வித்­துள்­ளது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
நாயன்­மார்கள் பலரும் அறிந்­துள்ள பெண்­ண­டி­யார்கள் மூவரில் அம்­மையார் என்று அழைத்து போற்­றப்­ப­டு­பவர் காரைக்கால் அம்­மை­யார்தான்.
இவ­ரது பக்­தியின் மேன்­மையால் சிவ­பெ­ரு­மானே இவரை அம்மா என்று அழைத்தார். தகு­தி­யு­டை­ய­வர்­க­ளைதான் அம்மா என்று அழைக்க வேண்டும் என்று புரா­ணங்கள் கூறு­கி­ன்றன.
ஆனால், தமி­ழ­கத்தில் என்ன நடக்­கி­றது? ஊழல் செய்து பெருமளவில் சொத்து சேர்த்த பொது வாழ்வில் அழுக்­கு­டைய ஜெய­ல­லி­தாவை அம்மா என்று ஏரா­ள­மா­ன­வர்கள் அழைத்து வரு­கி­றார்கள்.
எங்கள் அம்மா மீது ஊழல் வழக்கு நடக்­க­வில்லை. சொத்துக் குவிப்பு வழக்­குத்தான் நடக்­கி­றது என்று அவர் கட்­சியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்­வதி கூறு­கிறார்.
ஊழல் செய்து வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்து கொண்­டி­ருக்கும் ஒரு­வரை, பொது வாழ்வில் தூய்மை இல்­லாத ஒரு­வரை அம்மா என்று அழைப்­ப­துடன் எங்கு பார்த்­தாலும் அம்மா புராணம் பாடு­வதால் அந்த சொல்­லுக்கே மதிப்­பில்­லாமல் போய்­வி­டு­கி­றது.
இதன் மூலம் காரைக்கால் அம்­மையார் பெய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­து­கி­றார்கள். தன் அழகைத் துறந்து எலும்­பு­டம்­பா­கிய பேய் உருவம் கேட்டுப் பெற்­ற­துடன், எளி­மையை கடை­பி­டித்­தவர் காரைக்கால் அம்­மையார். அத­னால்தான் அவரை அம்மா என்று இன்றும் அழைக்­கி­றார்கள். ஆனால், ஜெய­ல­லி­தாவோ ஆடம்­ப­ரத்தின் உச்சம். எளிமை என்றால் அவ­ருக்கு என்­ன­வென்றே தெரியாது. அவரைப் போய் அம்மா என்று அழைப்பது வேதனையின் உச்சம் என தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாஇழுக்குஊழல்காரைக்கால்சாமியார்ஜெயலலிதாதமிழகம்திருவடிக்குடில்
Comments (0)
Add Comment