இந்தநிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்ற உத்தரவால், அந்தக் கடைகளை வேறு எங்கு வைப்பது என்று டாஸ்மாக் அதிகாரிகள் இடம் தேடிக் கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விளாங்காட்டூர் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 3 கி.மீ. தொலைவில் உள்ள கட்சிபெருமாநத்தம் கிராமத்திற்கு மாற்ற திட்டமிட்டனர்.
இதனை அறிந்த கட்சிபெருமாநத்தம் கிராம மக்கள் டாஸ்மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.