தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உடனே வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

 செப்டெம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டிய 45 டிஎம்சி நீரை கர்நாடகா இதுவரை வழங்கவில்லை என மனுவில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

 இதுபற்றி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் ஏற்கனவே முறையிட்டும் அக்குழு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்கர்நாடக அரசுகாவிரி நீர்தமிழக அரசுதமிழகம்மனு
Comments (0)
Add Comment