தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுகிறது: கனிமொழி குற்றச்சாட்டு

தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சூளையில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது ஆட்சி நிர்வாகம் மந்தமாக இருந்தது போலவும், தற்போது ஜெயலலிதா தலைமையில் திறம்பட ஆட்சி நடப்பது போன்றும் மாயையான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

மேலும் ஜெயலலிதா முதலமைச்சராவதை மக்களுக்குப் பதிலாக நீதிமன்றமே தீர்மானிப்பதாகவும் கனிமொழி கூறினார். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை என்றும் கனிமொழி குறை கூறினார்.

கனிமொழிகருணாநிதிகருத்துச் சுதந்திரம்குற்றச்சாட்டுஜெயலலிதாதமிழகம்திமுகமுதலமைச்சர்
Comments (0)
Add Comment