தமிழகத்தில் மழைக்கு இதுவரை 230 பேர் பலி!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவில் இருந்து அநேக இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி வருகிறது. மழைநீர் தேங்கி வருவதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 சென்னை மட்டுமல்லாது அதன், சுற்றுப்புறங்களிலும் மழை பெய்து வருவதால், ஏற்கனவே தேங்கிய வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம், கரூர், அருப்புக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது.

 நீலகிரி மாவட்டம் கேத்தியில் அதிகபட்சமாக 116 மில்லிமீட்டர் மழை பதிவானது. குன்னூரில் 114 மில்லிமீட்டரும், கொடநாட்டில் 87 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதனிடையே மழை தொடர்பான சம்பவங்களில் தமிழகத்தில் இதுவரை 230 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

230 பேர் பலிசென்னைதமிழக காவல்துறைதமிழகம்போக்குவரத்து நெரிசல்மழை
Comments (0)
Add Comment