தமிழக மீனவர்கள் 30 பேர் சிறீலங்கா கடற்படையால் கைது

இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 30 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று  திங்கட் கிழமை 2014-02-03கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் 8 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தை சேர்ந்த சேதுராமன், மாவீரன் மற்றும் இருவருக்கு சொந்தமான 8 விசைப்படகுகளையும், அதில் இருந்த 26 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

இவர்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மீன்பிடி அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேபோல், நாகப்பட்டினம், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 4 மீனவர்கள் பைபர் படகில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
Comments (0)
Add Comment