அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊழலிலின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க மாணவர்கள் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டும். நான் எனது தாயையும், தமிழ்மொழியையும் அதிகம் நேசிக்கிறேன். படித்த இளைஞர்கள் சுயநலத்துடன் இல்லாமல் அநீதியை தட்டிக்கேட்க வேண்டும் என்றார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சகாயம், தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பார்கிறேன். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் என்பது அரசுக்கு எதிரானது இல்லை. தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு அதிக வலு சேர்க்கும் என கூறினார். மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே விவாசயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படு்ம். எனவே இதில் அரசாங்கம் அதிகபடியான கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.