கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், இதுவரை 2 ஆயிரத்து 788 குடும்பங்களை சேர்ந்த சுமார் 10 000 (பத்தாயிரம் )பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 414 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
கிளிநொச்சி மாவட்டத்தில், ஆயிரத்து 347 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிகபப்ட்டவர்களுள் 5 ஆயிரத்து 775 பேர், 40 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.