திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் 4 தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில், புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, ஓட்டபிடாரம், வாசுதேநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டணியில் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். போட்டியிடும் சின்னம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணசாமிதிமுக கூட்டணிதொகுதிகள்புதிய தமிழகம் கட்சி
Comments (0)
Add Comment