திருமுறிகண்டியில் அடைத்த வேலியை இரவோடிரவாக பிடுங்கிய இராணுவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச காணிகள் அடங்கலாக சுமார் 300 ஏக்கர் காணி சுபீகரிப்பு முயச்சி நேற்று (24)பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில்சுமார் 50 ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணிகளை சுபீகரித்து பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் தற்போது அந்த இடத்துக்கு மேலதிகமாக பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச காணிகள் அடங்கலாக சுமார் 300 ஏக்கர் காணி சுபீகரிப்பு நடவடிக்கையாக வேலி அமைக்கும் பணியைமுன்னெடுத்தது

குறித்த காணியை சுபீகரிக்கும் முயற்ச்சியில் இராணுவம் ஈடுபட்டதை அவதானித்த மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் குறித்தபகுதியில் கூடி இராணுவ அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதோடு காணி சுபீகரிப்பை நிறுத்துமாறும் தொடர்ந்து இடம்பெறுமானால் மக்கள் போராட்டம் இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்

எனினும் குறித்த முகாமில் உயர்நிலை அதிகாரி இல்லாத நிலையில் இரண்டாம் நிலை அதிகாரி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் கலந்துரையாடி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்த விடயங்களை உயரதிகாரிக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார். இருப்பினும் காணி சுபீகரிப்பு நிறுத்த வேண்டும்   எனவும் இல்லையெனில் மக்கள் போராட்டம் இடம்பெறும் எனவும் குறித்த அதிகாரியிடம்  தெரிவித்தனர்

இந்நிலையில் குறித்த வேலியினை நேற்று (24) இரவோடு இரவாக இராணுவம் அகற்றியுள்ளதாக தெரியவருகிறது

இராணுவம்திருமுறிகண்டிவேலிகள்
Comments (0)
Add Comment