திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் – தருண்விஜய்

தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து மாநிலங்களவையில் எடுத்துக் கூறிய உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜய், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் மொழியானது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பாரம்பரிய மிக்கது என்றும் தெரிவித்த தருண் விஜய், திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிய செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உத்தரகாண்டம்குறிப்புசிறப்புஜனதாதமிழ்மொழிதருண்விஜய்திருவள்ளுவர்பாரதியபிறந்தநாள்மாநிலம்மொழிவேண்டுகோள்
Comments (0)
Add Comment