தூக்குத் தண்டனையை மீளவும்  நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க நேரிடும்..

தூக்குத் தண்டனையை மீளவும்  நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐ நா மனித உரிமைப் பேரவையில் விளக்கமளிக்க நேரிடும் என கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில்  கடந்த 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற ஐ  நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்வது தொடர்பில்  இலங்கை உறுதிமொழி வழங்கியிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

இதன் காரணமாக , எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வின் போது தூக்குத் தண்டனையை மீளவும் நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள  தீர்மானம் தொடர்பில் லங்கை  விளக்கமளிக்க நேரிடும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் மீளவும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ,ஐந்து மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம்தூக்குத் தண்டனைவிளக்கமளிக்க நேரிடும்..
Comments (0)
Add Comment