தேனி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் எனவும் ஐ ஐ டி தேசிய அளவில் நடத்த உள்ள பொது நுழைவு தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும். இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் நதி நீர் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓர வஞ்சனை செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும் நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.