நன்றாக இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலையை ஆளும் அரசு செப்பனிடுவது ஏன்?

மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும்! என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த அடையாளங்களும் பொது மக்களின் கவனத்தை ஈர்க்காத வகை யிலும், பொது மக்களைக் கவர்ந்து இழுக்கின்ற எந்த ஒரு நடவடிக்கை களையும் அரசியல் கட்சி கள் மேற்கொள்ளாத வகை யிலும், மத்திய, மாநில அரசுகளால் பொது மக்க ளுக்கு வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகள் தேர்தல் தேதி அறிவித்த பின் வழங்கப்படக்கூடாது எனவும் பல விதிகளை தேர்தல் ஆணையம் நடை முறைப்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிகளுக்கு ஆத ரவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்க னவே நடைபெற்ற தேர் தல்களிலும், தற்போதும் எழுந்துள்ள நிலையில் குற்றச்சாட்டுகளிலும், தற் போதும் எழுந்துள்ள நிலையில் குற்றச்சாட்டுக் கள் உண்மை தானோ? என்று சந்தேகிக்கும் படி யாக திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ள கோவில் மய்யப் பகுதியில் நன்றாக இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலையை (தே. நெ 67) பொதுமக்களின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் தேர்தல் ஆணைய விதிக ளுக்கு முரணாக செப்பனி டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், காங்கயம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியும் கண்டு கொள்ளாதது ஏன்? ஏன்?

ஆணையம்தேர்தல்நடவடிக்கைநெடுஞ்சாலைபுனரமைப்புமக்கள்மனச்சாட்சிவாக்குவிழிப்புணர்வு
Comments (0)
Add Comment